×

சென்னை கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில் கோயில் நிதியில் கலாச்சார மையம் கட்டும் பணிகளை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில் கோயில் நிதியில் கலாச்சார மையம் கட்டும் பணிகளை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு செந்தமான பசுமைவழி சாலையில் உள்ள 22.280 கிரவுண்ட் நிலத்தில் 26.78 கோடி செலவில் கலாச்சார மையம் கட்டுவது தொடர்பாக 2023-ம் அண்டு செப்டம்பர் 4-ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த கலாச்சாரம் மையம் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் டி.ஆர்.ரமேஷ் எனவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் இந்துசமய அறநிலையத்துறை சட்டவிதிகளை பின்பற்றாமல் உரிய அதிகாரம் இல்லாமல் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் ரூ.88 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தில் கலாச்சார மையம் கட்டுவது மூலமாக ஆண்டுக்கு ரூ.10 கோடி வாடகை வருவாய் பாதிக்கப்படும் என்றும் கோவில் நிதியில் இந்ருது ரூ.27 கோடி கட்டுமானத்துக்கு பயன்படுத்துவதால் ஆண்டுதோறும் ரூ.2.50 கோடி வட்டி வருவாய் பாதிக்கப்படும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கலாச்சார மையம் கட்ட விரும்பிலால் அதற்கு வேறு இடங்கள் உள்ளன அந்த பகுதிகளில் உள்ள அரசு நிலத்தில் கட்டினால் அது வரவேற்க தக்கது என்றும், தற்போது திட்ட அனுமதி இல்லாமல் இந்த கலாச்சார மையம் கட்ட முடியாது என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கோவில் நிதியை பயன்படுத்துவது தொடர்பாக ஆட்சேபங்கள் பெறப்பட்டதா என்று இன்று விளக்கமளிக்கும் படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் மற்றும் பாலாஜி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது,உரிய அனுமதிகளை பெறாமல் எந்த ஒரு கட்டுமானமும் மேற்கொள்ளப்படமாட்டாது என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். தொடர்ந்து கோயில் நன்கொடையை பயன்படுத்துவதாக இருந்தால் மட்டுமே ஆட்சேபங்கள் கோரவேண்டும் என்றும் இந்த கலாச்சார மையம் மூலமாக கோயிலுக்கு வருவாய் கிடைக்கும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை இறுதி விசாரணைக்காக ஜூன் 3-வது வாரத்திற்கு தள்ளிவைத்தனர். இந்த வழக்கு முடியும் வரை கலாச்சார மையம் கட்டுமான பணிகளை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post சென்னை கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில் கோயில் நிதியில் கலாச்சார மையம் கட்டும் பணிகளை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Kabaliswarar ,Chennai ,GREEN ,KABALISWARAR TEMPLE, ,CHENNAI MAYLAPUR ,
× RELATED பணியிடங்களில் பாலியல் தொல்லையால்,...