×

வேலூர் மாவட்டத்தில் 2400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் அழிப்பு

*லாரி டியூப்களில் பதுக்கி வைத்த சாராயம் பறிமுதல்

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் 2400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை போலீசார் ரெய்டு நடத்தி அழித்தனர். வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் மதுபாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் காய்சுபவர், விற்பவர் மற்றும் கடத்துபவர்களை தடுக்க எஸ்பி மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதன் அடிப்படையில் நேற்று வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் அணைக்கட்டு மூலகேட் மலைப்பகுதி அருகே சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஜார்த்தான்கொள்ளை பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் (20) என்பவர் லாரி டியூப்களில் பதுக்கி வைத்திருந்த 105 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்தனர். மேலும் பார்த்திபனை கைது செய்தனர்.

குடியாத்தம் மதுவிலக்கு மலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் சின்னதுரை தலைமையிலான போலீசார் சாத்கர் மலைப்பகுதியில் சோதனை நடத்தினர். 600 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், 60 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டனர். பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் ருக்மான்கதன் தலைமையிலான போலீசார் சாத்கர் மலைப்பகுதியில் உள்ள லட்சுமிவெடி மற்றும் மாமரத்து கொள்ளை பகுதியில் சோதனை மேற்கொண்டு சுமார் 1,800 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் கொட்டி அழிக்கப்பட்டது.மேலும் மாவட்டம் முழுவதும் அந்தந்த இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில் 18 மதுபாட்டில்கள் மற்றும் 2,050 ரூபாய் மதிப்புடைய 0.205 கிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

The post வேலூர் மாவட்டத்தில் 2400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Vellore district ,Vellore ,Dinakaran ,
× RELATED ₹2.15 கோடியில் புத்துயிர் பெறும் வேலூர்...