×

தமிழகத்தில் கனமழை காரணமாக 15 பேர் உயிரிழப்பு: பேரிடர் மேலாண்மைத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் மே 16 முதல் 22 வரை கனமழை காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை தகவல் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட
ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 4.05 கோடி செல்போன்களுக்கு எச்சரிக்கை மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு காற்று, கடல் சீற்றம் குறித்து எச்சரிக்கை தகவல் வழங்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 296 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள் தயார்நிலையில் உள்ளது என்று பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

The post தமிழகத்தில் கனமழை காரணமாக 15 பேர் உயிரிழப்பு: பேரிடர் மேலாண்மைத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Disaster Management Department ,Chennai ,Nellai ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக...