×

மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே 4 நாளுக்கு பின்னர் மலை ரயில் சேவை துவங்கியது

*சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே 4 நாட்களுக்கு பின்னர் மலை ரயில் சேவை துவங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற சிறப்பு வாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக கடந்த 18ம் தேதி கல்லாறு-அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, பாறைகள் ரயில் பாதையில் விழுந்து தண்டவாளம் சேதம் அடைந்தது. இதனால் தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் மலை ரயில் சேவையை ரத்து செய்து அறிவித்தது.

தண்டவாள சீரமைப்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வந்தன. அப்பணிகள் முழுமையாக முடிவடைந்து ரயில் பாதை சீரமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் மலை ரயில் சேவை மீண்டும் துவங்கியது. கோவை, திருப்பூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த 184 பயணிகள் மலை ரயிலில் உற்சாகத்துடன் பயணம் செய்தனர். 4 நாட்களுக்குப்பிறகு மலை ரயில் சேவை துவங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே 4 நாளுக்கு பின்னர் மலை ரயில் சேவை துவங்கியது appeared first on Dinakaran.

Tags : Mettupalayam- ,Ooty ,Mettupalayam ,Mettupalayam-Ooty ,UNESCO ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில்...