×

அதிரடியாக குறைந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.54,000க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.54,000க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.6,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3.30 குறைந்து ரூ.97க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது.

இந்த நிலையில் அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை ஒரே நாளில் மூன்று முறை அதிகரித்து அதிர்ச்சியளித்தது.நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில், நேற்று விலையில் மாற்றிமின்றி விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.54 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.6,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3.30 குறைந்து ரூ.97-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post அதிரடியாக குறைந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.54,000க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்