×

கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடிக்கு செல்ல திடீர் தடை: ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள்

ராமேஸ்வரம்: கோடை வெயிலின் தாக்கம் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை காரணமாக குடும்பம் குடும்பமாக பல இடங்களுக்கு சுற்றுலா செல்ல தொடங்கியுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தை பொறுத்த வரை ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர். அடுத்ததாக குற்றாலத்திற்கு மக்கள் சென்றனர். ஆனால் தென்காசி மாவட்ட்த்தில் பெய்து வரும் கன மழை காரணமாக அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆன்மிக பயணமாக ராமேஸ்வரத்திற்கு பல மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். ராமேஸ்வரத்திற்கு வரும் பக்தர்கள் புகழ்மிக்க ராமநாதசாமி கோயில், அக்னி தீர்த்தம், ராமர் பாதம் உள்ளிட்ட் இடங்களை சென்று சுற்றிப்பார்ப்பார்கள். இதனை தொடர்ந்து 1967ஆண் ஆண்டு ஏற்பட்ட புயலால் அழிந்த தனுஷ்கோடி பகுதிக்கு செல்வார்கள். அங்கு சாலைகள் அமைக்கப்பட்டு இரு கடல்களும் இணையும் இடம் அருமையாக இருக்கும். அந்த இடம் தான் இந்தியாவின் கடைசி நிலப்பரப்பாகும். இந்த இடத்தில் நினைவு சின்னமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருவதனால் அப்பகுதிக்கு சுற்றுலா பயணிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.அதாவது இன்று காலை மேல் வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தனுஷ்கோடிக்கு சென்று ஆய்வு செய்த பின்னர் காற்றின் வேகம் குறைவாக வீசினால் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்திலிருந்து வந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகளை ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சூழல் உருவாகி இருக்கின்றது.

The post கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடிக்கு செல்ல திடீர் தடை: ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Dhanushkodi ,Rameshwaram ,Godaikanal ,Tamil Nadu ,
× RELATED தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிப்பு