×

அரசன் ஏரியில் பெண் சடலம் மீட்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மகிழம்பாடி ஊராட்சியில் உள்ள அரசன் ஏரியில் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் எந்த காயங்களும் இன்றி அழுகிய நிலையில் சடலமாக கிடப்பதாக, மகிழம்பாடி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அங்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் சடலமாக கிடந்த பெண் குறித்து விசாரணை செய்தார். ஆனால் அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் அப்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர், எப்படி இறந்தார் என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

The post அரசன் ஏரியில் பெண் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Arsan lake ,Mahizambadi Village Administration ,Officer ,Mahizambadi panchayat ,Samayapuram ,Trichy district ,
× RELATED யோகா ஒலிம்பியாட் போட்டி