×

பைக் மீது டிப்பர் லாரி மோதல்: ஒருவர் பலி

பாடாலூர், மே 23: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் டிப்பர் லாரி மோதி அடையாளம் தெரியாத ஒருவர்உயிரிழந்தார். ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஊட்டத்தூர் பிரிவு சாலை பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது டிப்பர் லாரி மோதியது. இதில் லாரியின் டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடைபெற்ற பகுதியில் மேம்பாலம் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இந்த விபத்தின் காரணமாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post பைக் மீது டிப்பர் லாரி மோதல்: ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : BATALORE ,ALATHUR TALUKA BATALUR, PERAMBALUR DISTRICT ,Alathur Taluga ,Oattur ,Trichy Chennai National Highway ,Badalur ,Dinakaran ,
× RELATED ஆலத்தூர் அருகே டி.களத்தூரில் குடிநீர்...