×

நகை செய்து தருவதாக ரூ.4.5 லட்சம் மோசடி

சிவகாசி, மே 23: சிவகாசி கட்டளைபட்டி ரோட்டை சேர்ந்தவர் செந்தில்குமார்(42). இவர் திருத்தங்கல்லில் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்த மாரிச்செல்வம் என்பவரிடம் புதிதாக நகைகள் செய்வதற்காக ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக் கொண்ட மாரிச்செல்வம், நகை செய்து கொடுக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த செந்தில்குமார் எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்தார். எஸ்பி அலுவலகம் மனுவை சிவகாசி டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தது. அதன் பெயரில் மாரிச்செல்வம் மீது சிவகாசி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post நகை செய்து தருவதாக ரூ.4.5 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Senthilkumar ,Sivakasi Komandapatti Road ,Marichelvam ,Thirutangalll ,Dinakaran ,
× RELATED சாதனை மாணவிகளுக்கு திமுக சார்பாக கல்வி நிதி உதவி