×

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது

ஈரோடு, மே 23: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், அரசூர் பவானி ஆற்றின் அருகில் உள்ள பட்டத்தரசியம்மன் கோயில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கடத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் காலையில், அரசூர், பவானி ஆற்றில் மீன் பிடிக்க சில கல்லூரி மாணவர்கள் சென்றனர். அப்போது, பட்டத்தரசியம்மன் கோயில் அருகில் மறைவாக நின்றிருந்த நபர் ஒருவர், மீன் பிடிக்க சென்ற கல்லூரி மாணவர்களிடம் அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சாவை விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், அவர் கடத்தூர் அருகே உள்ள சுட்டிக்கல் மேடு பவர்ஹவுஸ் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் (37) என்பது தெரியவந்தது. மேலும், அவரிடம் போலீசார் சோதனையிட்டதில் மஞ்சள் பையில் 250 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

The post கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Kaduur police ,Pattatharasiyamman ,Bhavani river, Sathyamangalam, Erode district ,Dinakaran ,
× RELATED சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 8 பேர் கைது