×

நாமக்கல்லில் 2 நாள் மழை பெய்ய வாய்ப்பு

நாமக்கல், மே 23: நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில், 3 நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று (23ம் தேதி) 15 மி.மீட்டர் நாளை 18 மில்லி மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை அதிகபட்சம் 91.4 டிகிரியாகவும், குறைந்தபட்சம் 73.4 டிகிரியாகவும் இருக்கும். கால்நடைகளை தாக்கும் புற ஒட்டுண்ணிகளில் உண்ணி தாக்கம் பண்ணையாளர்களுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்த கூடியது ஆகும்.

உண்ணிகள் கால்நடைகளை கடித்து ரத்தம் உறிஞ்சுவதால், ரத்த சோகை ஏற்படுத்துவதுடன், பல நோய் கிருமிகளை கால்நடைகளுக்கு பரப்புவதால், கால்நடைகளின் உற்பத்தி திறன் குறைந்து, பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. எனவே, உண்ணிகளை கட்டுப்படுத்த பொதுவாக பூச்சிக்கொல்லி மருந்துகளான சைபர் மெத்திரின், டெல்டா மெத்திரின், புளு மெத்திரின் போன்றவை பயன்படுத்தப்படுகிறது. உண்ணிகளை கட்டுப்படுத்துதலில் முக்கியமான ஒன்று, முதல் மருந்து தெளித்து 21 நாட்கள் கழித்து கால்நடை மற்றும் கொட்டகைக்கு இரண்டாம் மருந்து தெளிக்க வேண்டும். அப்படி செய்தால் தான், உண்ணிகளை கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post நாமக்கல்லில் 2 நாள் மழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal Veterinary College and Research Institute ,
× RELATED பஸ் டிரைவரை கொன்று உடலை ஏரியில்...