×

லட்சுமி நரசிம்ம சாமி கோயில் தேர் திருவிழா

கிருஷ்ணகிரி, மே 23: கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சாமி கோயில், 38வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 15ம் தேதி தொடங்கியது. இதையொட்டி, தினமும் நரசிம்மர் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று தேர் திருவிழா நடந்தது. நரசிம்மரை பெரிய தேரில் அமர்த்தி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். பின்ன,ர் கோயில் வளாகத்தில் 1,800 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post லட்சுமி நரசிம்ம சாமி கோயில் தேர் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Lakshmi Narasimha Sami Temple Chariot Festival ,Krishnagiri ,Lakshmi Narasimha ,Sami ,Temple ,Old Petty ,Brahmotsava festival ,Narasimha ,Nagarvalam ,
× RELATED மாவட்ட திமுக வக்கீல் அணியினர் ஆர்ப்பாட்டம்