×

4 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது விசாரணை குழுவை அமைத்தது இலங்கை

கொழும்பு: இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த வந்ததாக கைதான 4 ஐஎஸ் தீவிரவாதிகள் குறித்து விசாரிக்க விசாரணை குழுவை இலங்கை அமைத்துள்ளது. ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து, இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தும் திட்டத்துடன் கொழும்பில் இருந்து சென்னை வழியாக அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்த இலங்கையைச் சேர்ந்த 4 இளைஞர்களை குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் கடந்த 19ம் தேதி கைது செய்தனர். இதுதொடர்பாக இலங்கை அரசுக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கைதான 4 பேர் குறித்து விசாரிக்க இலங்கையின் மூத்த டிஐஜி தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்து ஐஜி தேஷபாண்டு தன்னாகோன் நேற்று உத்தரவிட்டார். இந்திய அதிகாரிகளுடன் இணைந்து அக்குழுவினர் விசாரணை நடத்த உள்ளனர்.

The post 4 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது விசாரணை குழுவை அமைத்தது இலங்கை appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Colombo ,IS ,India ,Ahmedabad ,Chennai ,Dinakaran ,
× RELATED இலங்கை அதிபர் தேர்தல் தேதி விரைவில்...