×

சில்லி பாயின்ட்…

* காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்த இங்கிலாந்து வேகம் ஜோஃப்ரா ஆர்ச்சர், 382 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களத்துக்கு திரும்பியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக லீட்ஸ், ஹெடிங்லி மைதானத்தில் நேற்று நடந்த முதல் டி20 போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அவர் இடம் பிடித்தார். ஆர்ச்சரின் வரவு ஐசிசி உலக கோப்பை டி20ல் இங்கிலாந்து அணியின் பலத்தை மேலும் அதிகரித்துள்ளது.
* இலங்கை பிரிமியர் லீக் தொடரில் களமிறங்கும் தம்புல்லா தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் தமிம் ரகுமான், ‘மேட்ச் பிக்சிங்’ கிரிக்கெட் சூதாட்ட குற்றச்சாட்டில் கைதாகி உள்ளார். இவர் வங்கதேசத்தில் பிறந்து இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
* ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த இங்கிலாந்து அணி வீரர்களை நாடு திரும்புமாறு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டது சரியான முடிவு தான். ஐசிசி உலக கோப்பை போன்ற மிகப் பெரிய தொடருக்கு தங்கள் வீரர்கள் உரிய நேரத்தில் தயாராக வேண்டும் என நினைப்பதில் எந்தத் தவறுமில்லை என்று என்று இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் தெரிவித்துள்ளார்.
* தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி வீரர்களின் வலைப்பயிற்சி கைவிடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அதை மறுத்துள்ள குஜராத் கிரிக்கெட் சங்கம் ‘வெப்ப அலை வீசியதாலேயே பயிற்சி ரத்தானதாக’ விளக்கம் அளித்துள்ளது.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : England ,Jofra Archer ,T20 ,Pakistan ,Headingley, Leeds ,Dinakaran ,
× RELATED டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இன்று மோதல்