×

குழந்தையின் பாலினத்தை வெளியிட்ட விவகாரம்; மன்னிப்பு கோரினார் யூடியூபர் இர்பான்

சென்னை: பிரபல யூடியூபர் இர்பான், தன் மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை வெளியிட்ட விவகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில், அதற்காக தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளார். உணவு தொடர்பான வீடியோக்களை யூடியூபில் வெளியிட்டு பிரபலம் அடைந்தவர் இர்பான். கடந்த ஓராண்டுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில், தன்னுடைய மனைவியின் கருவில் இருக்கும் குழந்தை, ஆணா அல்லது பெண்ணா என்பதை வெளிநாட்டிற்குச் சென்று சோதனை செய்து, அதனை தமிழ்நாட்டில் வீடியோவாக வெளியிட்டார்.

இர்பானின் இந்த செயல், சர்ச்சையை கிளப்பியது. இந்தியாவில் பெண்ணின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை முன்னரே அறிவது சட்டப்படி குற்றம். இந்த குற்றத்தை இர்பான் செய்துவிட்டதாக புகார் எழுந்தது. இதற்கு விளக்கம் கேட்டு இர்பானுக்கு அரசு சுகாதாரத்துறை சார்பில் நேற்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரை சந்தித்து நேரில் சந்தித்து இர்பான் மன்னிப்பு கடிதம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post குழந்தையின் பாலினத்தை வெளியிட்ட விவகாரம்; மன்னிப்பு கோரினார் யூடியூபர் இர்பான் appeared first on Dinakaran.

Tags : Irfan ,CHENNAI ,Irrfan ,Tamil Nadu ,YouTube ,
× RELATED குழந்தையின் பாலின விவகாரத்தில்...