×

கள்ளத்தொடர்பு ரவுடித்தனம் செய்த அதிமுக நிர்வாகி கைது

குத்தாலம்: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே காளி, பொய்கைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (43). நீடூர் துணை மின்நிலைய வணிக ஆய்வாளர். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் இவரது மனைவியிடம், திருமங்கலம் கிராமத்தை சேர்ந்த அதிமுக அம்மா பேரவை வடக்கு ஒன்றிய துணை செயலாளர் கீர்த்திவாசன் (32) பழகி வந்துள்ளார். இதை அறிந்த சிவக்குமார், அவரை நேரில் பார்த்து கண்டித்துள்ளார்.

இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் கடந்த 17ம்தேதி இரவு கட்டளைசேரி வயல்வெளியில் டூ வீலரில் வந்த சிவக்குமாரை வழிமறித்து கீர்த்திவாசன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.1000த்தை பறித்து கொண்டதோடு, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிவக்குமார் அளித்த புகாரின்படி குத்தாலம் போலீசார் வழக்கு பதிந்து நேற்றுமுன்தினம் இரவு கீர்த்திவாசனை கைது செய்தனர்.

The post கள்ளத்தொடர்பு ரவுடித்தனம் செய்த அதிமுக நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Kutthalam ,Sivakumar ,Poikaikudi village ,Kali ,Mayiladuthurai district ,Nitur Substation ,Mayiladuthurai Government Hospital ,Amma Parevai ,Tirumangalam ,
× RELATED சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் பணி