×

வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்யும் முன் தாயின் ஆசியை பெற முடியவில்லை: பிரதமர் மோடி வருத்தம்

வாரணாசி: வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள மோடி, மறைந்த தனது தாயின் ஆசியை பெறமுடியவில்லை என்று கவலையுடன் கூறினார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் 3வது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடி, நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பேசுகையில், ‘முதன் முறையாக மறைந்த எனது தாயின் ஆசீர்வாதம் இல்லாமல் வாரணாசி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தேன்.

கடந்த காலங்களில் எனது தாயின் ஆசியுடன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தேன். ஆனால் இம்முறை அப்படி நடக்கவில்லை. கங்கையால் நான் காசிக்கு அழைக்கப்பட்டேன். கங்கை தாய் என்னை தத்தெடுத்துக் கொண்டார். இந்திய வரலாற்றில் முதல்முறையாக நாட்டின் கொள்கைகளை வகுக்கும் மையப் புள்ளிக்கு பெண்கள் வந்துள்ளனர். இந்தியாவின் வெற்றிக் கதையில் இது ஒரு முக்கிய காரணியாகும். காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி ஆட்சி காலத்தில் அவர்கள் பெண்களுக்கு என்ன செய்தார்கள்? ‘இந்தியா’ கூட்டணி பெண்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்க்கிறது.

‘இந்தியா’ கூட்டணியை சேர்ந்த தலைவர்கள், இந்துக்களின் சக்தியை அழிப்போம் என்று வெளிப்படையாகச் சொல்கிறார்கள். ஜூன் 4ம் தேதிக்குப் பிறகு உங்கள் சக்தியை மகா சக்தியாக மோடி அரசு மாற்றும். பொதுமக்களுக்காக ெதாடர்ந்து நான் உழைத்து வருகிறேன்’ என்றார். வரும் ஜூன் 1ம் தேதி வாரணாசியில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடியை எதிர்த்து ‘இந்தியா’ கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் அஜய் ராய் களம் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்யும் முன் தாயின் ஆசியை பெற முடியவில்லை: பிரதமர் மோடி வருத்தம் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Varanasi ,Modi ,Asia ,Uttar Pradesh ,
× RELATED குவைத் தீ விபத்தில்...