×

பெரம்பலூர் அருகே சிறுவயலூர், இரூரில் மின்னல் தாக்கி 3 பசு மாடுகள் பலி

பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சிறுவயலூர் கிராமத்தை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் (50). விவசாயி. இன்று இவர் தனக்கு சொந்தமான பசு மாட்டை கொட்டகைக்கு வெளியே உள்ள மரத்தில் கட்டியிருந்தார். அப்போது பெய்த மழையின் போது மின்னல் தாக்கியது. இதில் மின்னல் தாக்கி மாடு சம்பவ இடத்திலேயே இறந்தது. இதையறிந்த கிராம நிர்வாக அலுவலர் பிரசாந்த் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

அதே போல் இரூர் கிராமத்தை சேர்ந்த அருணாசலம் என்பவருக்கு சொந்தமான 2 பசுமாடுகள் இன்று வயலுக்கு மேய்ச்சலுக்கு சென்றன. அப்போது மின்னல் தாக்கி 2 மாடுகளும் இறந்தன. இதையறிந்த கிராம நிர்வாக அலுவலர் ராஜ்மோகன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

The post பெரம்பலூர் அருகே சிறுவயலூர், இரூரில் மின்னல் தாக்கி 3 பசு மாடுகள் பலி appeared first on Dinakaran.

Tags : Siruvayalur, Irur ,Perambalur ,Padalur ,Mayakrishnan ,Siruvayalur ,Aladhur taluk ,Perambalur district ,Siruvayalur, ,Irur ,
× RELATED பாடாலூர் அருகே பைக்கில் இருந்து விழுந்து செவிலியர் பலி