×

கோவை அருகே கூட்டமாக தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானைகள்

*கால் டாக்சியை தாக்கியதால் பரபரப்பு

பெ.நா.பாளையம் : கோவை ஆணைகட்டியில் உள்ள முட்டக்காடு என்ற அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த வழியாக காட்டுயானைகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அருகில் உள்ள கிராமங்களுக்கு வருவது வழக்கம்.

இதை தடுப்பதற்காக வனத்துறை சார்பில் தொட்டி அமைத்து அதில் தண்ணீர் நிரப்பி உள்ளனர். நேற்று மாலை வழக்கம் போல குட்டிகளுடன் 5 காட்டு யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக ஆணைகட்டி சாலையை கடந்து சென்றது. அப்போது அந்த வழியாக ஒரு கால் டாக்சி வந்தது அதில் டிரைவர் மட்டும் இருந்துள்ளார். யானை கூட்டத்தை பார்த்தவுடன் தூரத்திலேயே காரை நிறுத்திவிட்டார்.

காரைப் பார்த்த ஒற்றை யானை ஒன்று காரின் முன் பக்கத்தை தும்பிக்கையால் அடித்துள்ளது பின்பக்க கண்ணாடியையும் உடைத்துள்ளது. அதன் பின் சிறிது தூரம் சென்று ரோட்டின் ஓரத்தில் நின்று கொண்டது. பதட்டத்தில் இருந்த டிரைவர் சாதூரியமாக காருடன் அங்கிருந்து வேகமாக தப்பி சென்று விட்டார்.சிறிது நேரம் அங்கிருந்த யானை கூட்டங்கள் முட்டக்காடு தொட்டியில் தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் வனப்பகுதிக்கு சென்றுவிட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post கோவை அருகே கூட்டமாக தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானைகள் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Ben Palayam ,Muttakad ,Anaikatti, Coimbatore ,
× RELATED கோவை பந்தய சாலை நடைபாதையில் இருந்த...