×

பெரியகுளம் அருகே நீர் வரத்தால் அழகான எலிவால் அருவி

பெரியகுளம் : மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை காரணமாக பெரியகுளம் அருகே உள்ள எலிவால் அருவியில் தண்ணீர் விழுகிறது.கொடைக்கானல் சாலையில் டம்டம் பாறை பகுதியின் எதிர்ப் பகுதியில் இருந்து எலிவால் அருவியை பார்க்க முடியும். மிக உயரத்தில் இருந்து ஒற்றை வரியாய் தண்ணீர் கொட்டுவதால் இதனை எலி வால் அருவி என அழைக்கின்றனர்.

பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 3 மாதங்களாக போதிய மழை இல்லாததால் இந்த எலி வால் அருவிக்கு நீர்வரத்து இல்லாமல் போனது.கொடைக்கானல் செல்லும் சாலையில் டம்டம்பாறை பகுதியின் எதிரே உள்ள எலிவால் அருவியில் முற்றிலும் நீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது.

இதனால் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் எலிவால் அருவியில் தண்ணீர் இல்லாததால் ஏமாற்றத்துடன் சென்றனர்.இந்நிலையில், கடந்த 10 நாட்களாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பெருமாள்மலை, சாமக்காடு, பாலமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கோடை மழையின் காரணமாக அருவியில் நீர் வரத்து துவங்கி அருவியில் நீர் கொட்டி வருகிறது.

The post பெரியகுளம் அருகே நீர் வரத்தால் அழகான எலிவால் அருவி appeared first on Dinakaran.

Tags : Eliwal Waterfall ,Periyakulam ,Western Ghats ,Eliwal ,Dumdam ,Kodaikanal road ,Dinakaran ,
× RELATED பெரியகுளம் அருகே நீர் வரத்தால் அழகான எலிவால் அருவி