×

₹10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

*ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 2 பேர் கைது

பண்ருட்டி : பண்ருட்டி டிஎஸபி பழனி மற்றும் போலீசார் ஜோதிநாதன், உதயகுமார், ஹரிஹரன் ஆகியோர் நேற்று அதிகாலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டி-கடலூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக கூறவே சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பண்ருட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பண்ருட்டி ஜெயப்பிரியா நகரில் பேன்சி ஸ்டோர் நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கர்மிராம் (28), மலாராம் (19) என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் இவர்கள் 2 பேரையும் கைது செய்து, பேன்சி ஸ்டோரில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் சிறப்பாக செயல்பட்டு புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்த பண்ருட்டி போலீசாரை கடலூர் எஸ்பி ராஜாராம் பாராட்டினார்.

The post ₹10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Panrutti ,DSP ,Palani ,Jyothinathan ,Udayakumar ,Hariharan ,Panruti-Kadalur road ,Dinakaran ,
× RELATED ஷூவிற்குள் மறைந்திருந்து படமெடுத்து மிரள வைத்த பாம்பு