×

மதுராந்தகத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

மதுராந்தகம், மே 22: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் தனியார் பள்ளி வாகனங்களுக்கான ஆய்வு பணிகள் நேற்று நடந்தது. மதுராந்தகம், செய்யூர் பகுதிகளில் உள்ள 142 தனியார் பள்ளிகளின் வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அபிதா பானு (செங்கல்பட்டு), செல்வி (மதுராந்தகம்), முரளி (திருக்கழுக்குன்றம்) ஆகியோர் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். அப்போது பிரேக், வாகனத்தின் பிளாட்பார்ம், அவசரகால கதவு, முதலுதவி சிகிச்சை பெட்டி, சிசிடிவி கேமரா உள்ளிட்ட அம்சங்களுடன் சாலையில் இயங்கும் வகையில் வாகனம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சாலை விதிகளை பின்பற்றி வாகனங்கள் பராமரிப்பு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், ஓட்டுனர்களுக்கு உடல் மற்றும் கண்மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரமூர்த்தி, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன், மதுராந்தகம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு தனியார் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கினர்.

The post மதுராந்தகத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Madurathanga ,Madhurandakam ,Chengalpattu district ,Maduraandakam ,Madhuranthakam ,Seyyur ,Maduranthakam ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப்...