×

திருச்சி ரயில் நிலையத்தில் ‘கவர்ச்சி ரீல்ஸ்’ வெளியிட்ட 3 இளம்பெண்கள் கைது

திருச்சி: திருச்சி ரயில் நிலைய நடைமேடையில் 3 இளம்பெண்கள் கவர்ச்சி நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டு இருந்தனர். இந்த வீடியோ வைரலானது. இதை பகிர்ந்த நெட்டிசன்கள் ரயில்வே மீது கடுமையாக விமர்சித்து இருந்தனர். இதையடுத்து, எந்தவித முன் அனுமதியின்றி கவர்ச்சி நடனம் ஆடி ரீல்ஸ் வெளியிட்ட பெண்கள் மீது, நடவடிக்கை எடுக்க திருச்சி ரயில்வே கோட்ட மூத்த பாதுகாப்பு கமிஷனர், ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில், உதவி பாதுகாப்பு கமிஷனர் பிரமோத் நாயர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் செபாஸ்டியன், எஸ்ஐ ரேஷ்மா மற்றும் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அந்த ரீல்ஸ் கடந்த 6ம் தேதி எடுத்ததும், 3 இளம்பெண்கள் மற்றும் ரீல்சை வீடியோ எடுத்த வாலிபர் ஆகியோர் திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் 4 பேரும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, திருச்சி தில்லைநகரில் உள்ள நடன பள்ளியில் பயின்று வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து நேற்று ரயில்வே பாதுகாப்பு படையினர், தடையை மீறி வீடியோ எடுத்தது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட ரயில்வே சட்டம் 145 (பி), 147 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து 4 பேரையும் கைது செய்து அபராதம் விதித்து, ஜாமீனில் விடுவித்தனர்.

The post திருச்சி ரயில் நிலையத்தில் ‘கவர்ச்சி ரீல்ஸ்’ வெளியிட்ட 3 இளம்பெண்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy railway station ,Trichy ,railway ,station ,
× RELATED ஏர்போர்ட் பகுதியில் குட்கா விற்ற பெண் கைது