×

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பசுமை பூங்கா அமைக்க வேண்டும்: அரசுக்கு அன்புமணி கடிதம்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி, தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கோயம்பேட்டில் இயங்கிவந்த புறநகர் பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பெரிய பசுமை பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும். மாறாக வணிக வளாகம், திரையரங்குகள், அடுக்குமாடி குடியிருப்பு, ஐ.டி பார்க் போன்ற எதையும் அமைக்க கூடாது. மேலும், மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்து வசதிகளுடன் கோயம்பேடு இணைக்கப்பட்டுள்ளதால் அதிக தொலைவில் உள்ள மக்களுக்கும் பயனாக இருக்கும். சென்னைப் பெருநகரில் பூங்காக்கள் உள்ளிட்ட பொதுவெளிகள் குறைந்து வரும் நிலைமையை மாற்றவும், பெருகிவரும் தொற்றா நோய்ப் பேராபத்தை எதிர்கொள்ளவும், சென்னையின் சுற்றுச்சூழலையும் உயிரின் மயத்தை காக்கவும், நீர்வளத்தை மேம்படுத்தவும், வெப்ப அலையை சமாளிக்கவும், வெள்ள பாதிப்பை குறைக்கவும் – கோயம்பேடு வெளியூர்ப் பேருந்து நிலையப் பகுதிகளில் புதிய பூங்காவை அமைக்க வேண்டும். அதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

The post கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பசுமை பூங்கா அமைக்க வேண்டும்: அரசுக்கு அன்புமணி கடிதம் appeared first on Dinakaran.

Tags : park ,Koyambedu bus station ,Anbumani ,Govt. ,CHENNAI ,Tamil Nadu government ,PAMC ,president ,Coimbatore ,Klambakum ,Dinakaran ,
× RELATED கேட்பாரற்று கிடந்த பார்சலுக்கு...