×

போதையில் கார் ஓட்டி 2 பேர் பலியான வழக்கில் சிறுவனின் தந்தை உட்பட 4 பேர் அதிரடி கைது

புனே: போதையில் கார் ஓட்டி 2 பேர் பலியான விவகாரத்தில் சிறுவனின் தந்தை உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தபட்டவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். புனேவை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர்களான அனிஷ் அவதியா மற்றும் அஷ்வினி கோஸ்டா இருவரும் ஓட்டலுக்கு சென்று விட்டு, கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிகாலை பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

சுமார் 3 மணி அளவில் கல்யாணிநகர் பகுதியில் பைக் சென்று கொண்டிருந்த போது அதே சாலையில் வந்த கார் ஒன்று பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் மற்றொரு கார் மீது விழுந்தனர். இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கார் ஓட்டிய 17 வயது சிறுவனை கைது செய்த போலீசார் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அவருக்கு 16 மணி நேரத்தில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதற்கிடையே விபத்து நடப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன் அந்த சிறுவன் பாரில் மது அருந்தும் சிசிடிவி காட்சிகள் நேற்று வெளியானது.  சிசிடிவி காட்சியை ஆதரமாக கொண்டு மது பான பார் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் 2 பேர் உட்பட 3 பேர் மீதும், கார் ஓட்டிய சிறுவனின் தந்தை மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் 4 பேரையும் நேற்று அதிரடியாக கைது செய்தனர். சிறுவனுக்கு மதுபானம் சப்ளை செய்த பார் சீல் வைக்கப்பட்டது.

The post போதையில் கார் ஓட்டி 2 பேர் பலியான வழக்கில் சிறுவனின் தந்தை உட்பட 4 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Pune ,Chief Minister ,
× RELATED புனேவில் கார் விபத்தை ஏற்படுத்திய...