×

பெண் இன்ஸ்பெக்டரிடம் தகராறு போதை ஏட்டு சஸ்பெண்ட்

வேலூர்: இந்தியாவில் திருத்தப்பட்ட 3 முக்கிய குற்றவியல் சட்டங்கள் வரும் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது. இதற்கான பயிற்சி மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் உட்கோட்ட அளவில் போலீசாருக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வேலூர் விஐடியில் முதற்கட்ட பயிற்சி ஏடிஎஸ்பி பாஸ்கரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது.

இந்த பயிற்சியில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர். அப்போது காட்பாடி காவல்நிலைய தலைமை காவலர் கோபியிடம் புதிய சட்டங்கள் குறித்து இன்ஸ்பெக்டர் பாரதி கேள்வி எழுப்பினார். அதற்கு மதுபோதையில் இருந்த கோபி ஆபாசமாக பேசி அநாகரிகமாக நடந்து கொண்டாராம். இதனால் பயிற்சி முகாமில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சக காவலர்கள், கோபியை அங்கிருந்து வெளியேற்றினர். மேலும் அவரை வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஏட்டு கோபி மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய எஸ்பி மணிவண்ணன், பயிற்சி முகாமில் மதுபோதையில் அநாகரிகமாக நடந்து கொண்ட ஏட்டு கோபியை நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

The post பெண் இன்ஸ்பெக்டரிடம் தகராறு போதை ஏட்டு சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Vellore ,India ,
× RELATED ரவுடிகளுக்கு செல்போன் கொடுத்து உதவி வேலூர் மத்திய சிறை மனநல ஆலோசகர் கைது