×

மதுரையில் 22-ம் தேதி அரசு சித்திரை பொருட்காட்சி: ஆட்சியர் அறிவிப்பு

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசு சித்திரை பொருட்காட்சி 22-ம் தேதி தொடங்குவதாக ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். மதுரையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக ஆண்டுதோறும் அரசுப் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அரசுத்துறைகளின் சார்பாக அரங்குகள் இடம்பெற உள்ளன. குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள், கேளிக்கை அரங்குகள், பல்பொருள் விற்பனை அங்காடிகள் இடம்பெற உள்ளன. அரசுப் பொருட்காட்சி 22-ம் தேதி தொடங்கி 45 நாட்கள் தினமும் மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெற உள்ளது.

 

The post மதுரையில் 22-ம் தேதி அரசு சித்திரை பொருட்காட்சி: ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Government Art Exhibition ,Madura ,Ruler ,Aadsir Sangeeta ,Madurai Tamukam Maidan ,Ministry of Public Relations ,Government Image Exhibition on ,Ruler's ,
× RELATED மதுரையில் விசாரணை கைதி தப்பியோட்டம்