×

போதை பொருட்களை ஒழிக்க போலீசார் கடும் நடவடிக்கை: அண்ணாநகர் துணை ஆணையர் அதிரடி

அண்ணாநகர்: அண்ணாநகர் காவல் மாவட்டம் சார்பில், போதை பொருட்கள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டம் சார்பில், அண்ணா நகர் துணை ஆணையர் சீனிவாசன் தலைமையில் முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு போதை பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில், திருமங்கலம் காவல் நிலைய உதவி ஆணையர் பரமானந்தம், இன்ஸ்பெக்டர்கள் சிபுக்குமார், ரஜினிஸ், நாஞ்சில் குமார், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சசிகலா, உதவி ஆய்வாளர், போலீஸ்காரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் துணை ஆணையர் சீனிவாசன் பேசியதாவது; அண்ணாநகர், அரும்பாக்கம், அமைந்தகரை, சூளைமேடு, திருமங்கலம், ஜெ.ஜெ.நகர், நொளம்பூர் பகுதிகளில் கஞ்சா, குட்கா, போதை மாத்திரைகள் விற்பனை செய்வதை தடுக்க சிறப்பு தனிப்படை அமைத்துள்ளோம். அந்த குழுவினர் 24 மணி நேரமும் மாறுவேடத்தில் கண்காணித்து வருகின்றனர்.

பள்ளி, கல்லூரி, பூங்காக்கள், பேருந்து நிலையம், ரயில் நிலைய பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சிறப்பு தனிப்படையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டுவருவதால் போதை பொருட்கள் விற்பனை குறைந்துள்ளது. போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், உயிரிழப்பு குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அண்ணாநகர் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் ரவுடிகளின் அட்டகாசம், கஞ்சா போதையில் தகராறு செய்பவர்கள், பெண்களை கேலி, கிண்டல் செய்பவர்கள், செயின், செல்போன் பறிப்பு, வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றவர்கள் பற்றி போலீஸ் உயரதிகாரிகளிடம் நேரடியாக புகார் கொடுக்கலாம். உங்கள் பிரச்னைகளை தீர்க்க காவல் நிலைய போலீசார் உதவி செய்வார்கள். போதை பொருட்கள் விற்பனை பற்றி தெரிந்ததால் பொது மக்கள் தகவல் கொடுக்கலாம். அவர்கள் பெயர் விவரம் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு பேசினார்.

 

The post போதை பொருட்களை ஒழிக்க போலீசார் கடும் நடவடிக்கை: அண்ணாநகர் துணை ஆணையர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Ananagar ,Annanagar Police District ,Narcotics Abolition and Awareness Meeting ,Annanagar Police District of ,Chennai ,Anna Nagar ,Deputy Commissioner ,Sinivasan ,Mukapere ,Dinakaran ,
× RELATED நாளை விசாரணைக்கு ஆஜராக டிடிஎஃப் வாசனுக்கு போலீஸ் சம்மன்