×

மாதவரத்தில் திமுக சார்பில் கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி

திருவொற்றியூர்: பசு, எருமை மற்றும் ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் குடிநீரின்றி தவிக்கும் நிலையை போக்க ஆங்காங்கு கால்நடைகளுக்கு தாகம் தீர்க்கும் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து மாதவரம் சட்டமன்ற தொகுதி 17வது வார்டு செட்டிமேடு பகுதியில் 8 இடங்களில் 600 பசு, எருமை கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு தண்ணீர் நிரப்பிவைத்துள்ளனர்.

இவற்றை கால்நடைகள் பருகி செல்கின்றன.முன்னதாக நடந்த விழாவில், மாதவரம் வடக்கு பகுதி திமுக செயலாளர் புழல் எம்.நாராயணன் திறந்து கலந்துகொண்டு திறந்துவைத்து கால்நடைகளுக்கு தண்ணீர், பழங்களை வழங்கினார். இதில் வட்ட செயலாளர் கருணாகரன், இளைஞரணி துணை அமைப்பாளர் அஜய் தென்னவன், பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

The post மாதவரத்தில் திமுக சார்பில் கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி appeared first on Dinakaran.

Tags : DMK ,Madhavaram ,Minister ,Udhayanidhi Stalin ,Anganku ,
× RELATED மாதவரம் வடக்கு பகுதி திமுக ஆலோசனை கூட்டம்