×

மயிலாடுதுறை மாவட்டத்தில் 90 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி

*நாற்று நடவு செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம்

சீர்காழி : மயிலாடுதுறை மாவட்டத்தில் 90 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு நாற்று பறிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மயிலாடுதுறை கொள்ளிடம் குத்தாலம், செம்பனார்கோயில், திருவெண்காடு, வைத்தீஸ்வரன்கோயில், ஆலஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பம்பு செட் நீரை பயன்படுத்தி விவசாயிகள் இந்த ஆண்டு சுமார் 90 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடியை துவங்கி உள்ளனர்.

தற்போது கடந்த சில நாட்களாக கோடைமழை பெய்து வருவதால் விவசாயிகள் மின் மோட்டார் நீரையும், மழை நீரையும் பயன்படுத்தி குறுவை சாகுபடி பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் நாற்று பறிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இதேபோல் பல இடங்களில் நடவு பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் முடிந்து உள்ளன.

மீதமுள்ள 70 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகளை செய்ய விவசாயிகள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறுவை சாகுபடி பணிகள் ஓரிரு வாரங்களில் முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழை விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி பணிகளை செய்ய உதவி புரிந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாயிகள் தங்களுக்கு தடையின்றி 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கினால் மட்டுமே குறுவை சாகுபடி செய்த நெற்பயிர்களை முழுவதும் பாதுகாத்து அறுவடை செய்து மகசூல் பெற முடியும் என்றனர்.

The post மயிலாடுதுறை மாவட்டத்தில் 90 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai district ,Kurvai ,Mayiladuthurai ,Kuthalam ,Sembanarkoil ,
× RELATED சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில்...