×

குழந்தை முதல் இளமைப்பருவம் வரை ஆர்.எஸ்.எஸ்.சில் இருந்தேன்: பிரிவு உபசார உரையில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சால் அதிர்ச்சி

கொல்கத்தா: கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சித்தரஞ்சன் தாஸ் என்பவர் ஓய்வு பெரும் போது நடந்த பிரிவு உபசார விழாவில் தான் ஒரு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருப்பதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சித்தரஞ்சன் தாஸ் நேற்று ஓய்வு பெற்ற போது அவருக்கு சக நீதிபதிகள் வக்கீல்கள் பிரிவு உபசார விழா நடத்தினர். இதில் கலந்து கொண்டு நீதிபதி சித்தரஞ்சன் தாஸ் பேசும் போது நான் ஆர்.எஸ்.எஸ்.சில் உறுப்பினராக இருந்தேன் என்பதை இங்கு ஒப்புக்கொண்டாக வேண்டும் என்று கூறினார்.

தனது குழந்தை பருவம் முதல், இளமை பருவம் வரை அங்கே இருந்தேன் என்று தெரிவித்த அவர் தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நிறைய கடன்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் தனது பணி நிமித்தமாக 37 ஆண்டுகள் அமைப்பை விட்டு விலகி இருந்ததாக கூறியிருக்கும் சித்தரஞ்சன் தாஸ். எனினும் அமைப்பிற்கு திரும்ப தயாராக இருப்பதாகவும், எந்த உதவிக்காகவும் அவர்கள் அழைத்தால் சென்று பணி செய்வேன் என்றும் தெரிவித்தார். ஆனால் தனது பணியில் அனைவரையும் சமமாகவே நடத்தியதாகவும் இடதுசாரியோ, காங்கிரசோ, பாஜகவோ அல்லது திரிணாமுல் காங்கிரசோ யாராக இருந்தாலும் ஒரே மாதிரியாகவே நடந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post குழந்தை முதல் இளமைப்பருவம் வரை ஆர்.எஸ்.எஸ்.சில் இருந்தேன்: பிரிவு உபசார உரையில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : R. S. S. Chill ,Kolkata High Court ,Kolkata ,Chitaranjan Das ,High Court of Kolkata ,R. S. ,S. Chitaranjan Das ,R. S. S. ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு மதிப்பெண் முறைகேடு...