×

பைக் ஏற்றி கணவரை கொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்

 

பொள்ளாச்சி, மே21: பொள்ளாச்சி அருகே எஸ்.சந்திராபுரத்தில், பைக்கை ஏற்றி கொலை செய்யப்பட்ட மணிகண்டனின் மனைவி கலாதேவி மற்றும் உறவினர்கள் நேற்று,பொள்ளாச்சி சப்.கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.பின் அவர்கள் கூறுகையில், ‘எங்கள் ஊரை சேர்ந்த அருண்ராஜ்,சூரியபிரகாஷ் இருவரும், மணிகண்டனை பைக்கில் அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு ஏற்பட்ட தகராறில் மணிகண்டனை பைக் ஏற்றி இருவரும் கொலை செய்துள்ளனர். ஆனால் போலீசார்,இருவர் மீது இந்திய சட்டத்தின்படி மட்டுமே வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் எஸ்சி எஸ்டி பிரிவில் வழக்குப்பதிவு செய்வதோடு, குண்டர் சட்டத்திலும் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட, இறந்த மணிகண்டனின் குடும்பத்துக்கு உடனடியாக நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பைக் ஏற்றி கணவரை கொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Pollachi ,S.Chandrapuram ,Manikandan ,Kaladevi ,Pollachi Sub-Collector ,Dinakaran ,
× RELATED கோடை மழையையடுத்து தக்காளி சாகுபடி...