×

அமராவதி ராஜவாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க கோரிக்கை

 

உடுமலை, மே 21: அமராவதி ராஜவாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாய சங்க நிர்வாகி கூறியதாவது: அமராவதி அணையில் 4 டிஎம்சி தண்ணீர் தேக்க முடியும். ஆனால் பல ஆண்டுகளாக தூர் வாராததால் 3 டிஎம்சி மட்டுமே தேக்க முடிகிறது. ராஜவாய்க்கால் மூலம் 25 ஆயிரம் ஏக்கர் பாசனம் நடக்கிறது.

ஆனால் கடைமடை பகுதிக்கு நீர் சரிவர கிடைப்பதில்லை. இதனால் அப்பகுதி விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாய்க்காலில் ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்துக்கும் இடைவெளிவிட்டு கான்கிரீட் தளம் அமைத்தால் கடைமடைக்கு எளிதாக தண்ணீர் கிடைக்கும். இதன்மூலம் விவசாயிகளும் பயன்பெறுவார்கள். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அமராவதி ராஜவாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Amaravati Rajavaikal ,Udumalai ,Farmers' Association ,Amaravati Dam ,Amaravati Rajawaikal ,Dinakaran ,
× RELATED உடுமலை அரசு மருத்துவமனையில் சம்பளம் கேட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்