×

நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் பிரசந்தா வெற்றி

காத்மண்ட்: நேபாளத்தில் பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகின்றது. இந்நிலையில் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஜனதா சமாஜ்வாதி கட்சி கடந்த வாரம் திரும்ப பெற்றது. அரசு பெரும்பான்மையை பெறுவதற்கு 138 வாக்குகள் அவசியமாகும். இதன்படி நேற்று நேபாள நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் பிரதான எதிர்கட்சியான நேபாள காங்கிரஸ் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 158 எம்பிக்கள் கலந்து கொண்டனர். இதில் பிரதமர் பிரசந்தாவிற்கு ஆதரவாக 157 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசந்தா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆட்சி பொறுப்பேற்ற கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பிரதமர் பிரசந்தா சந்தித்துள்ள 4வது நம்பிக்கை வாக்கெடுப்பு இதுவாகும்.

The post நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் பிரசந்தா வெற்றி appeared first on Dinakaran.

Tags : Nepal ,Prime Minister Prashanth ,Kathmandu ,Pushpa Kamal Dahal Prasanda ,Janata Samajwadi Party ,Prashanth ,Dinakaran ,
× RELATED 4வது முறையாக நம்பிக்கை ஓட்டு கோரும் நேபாள பிரதமர்