×

சதுரகிரியில் கனமழையால் 5 நாள் அனுமதி ரத்து: பக்தர்கள் ஏமாற்றம்

வத்திராயிருப்பு: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. வைகாசி பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை 5 நாள், பக்தர்களுக்கு மலையேறி சென்று வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் கனமழையால், சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்லும் வழியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக, வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தெரியாமல் தாணிப்பாறை அடிவாரத்திற்கு பிரதோஷ தினமான நேற்று வந்த பக்தர்கள், அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

The post சதுரகிரியில் கனமழையால் 5 நாள் அனுமதி ரத்து: பக்தர்கள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Chaturagiri ,Sundaramakalingam ,Western Ghats ,Chaptur, Madurai district ,Vaikasi Pradosham ,Poornami ,
× RELATED பருவ மழையால் பசுமையான ஆழியார் வனப்பகுதிகள்