×

தென் மாநிலங்களில் பாஜக நோட்டா விற்கு கீழ் தான் வாக்கு பெறும்: செல்வப்பெருந்தகை காட்டம்!

சென்னை: தென் மாநிலங்களில் பாஜக நோட்டா விற்கு கீழ் தான் வாக்கு பெறும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை; உத்திரபிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் தொகுதியில் ஒரு இளைஞர் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்து அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். எப்படியாவது குறுக்கு வழியில் வென்று விடலாம் என்று பாஜக ஜனநாயகத்துக்கு எதிரான வேலைகள் செய்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி பொது கூட்டங்களில் பேசும்போது மீண்டும் மீண்டும் சில மாநிலங்களில் இலவச பேருந்து பயணத்தினால் மெட்ரோ ரயில் காலியாக இருக்கிறது என கூறுகிறார். மெட்ரோ ரயில் வருமானத்தை பார்க்கும் பிரதமர் பெண்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்தை பார்க்காமல் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை விமர்சித்து பேசி வருகிறார். பாஜக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை சிதைத்து உள்ளது எனவும் ராகுல் காந்தி சிறந்த ஜனநாயக வாதி, உண்மையை பேசினால் பிரதமருக்கு புடிக்காது.

தமிழ்நாட்டின் உரிமைகள் ஒருபோதும் பாதிக்க கூடாது தமிழ்நாட்டின் விவசாய பெருங்குடி மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் வந்துவிடக்கூடாது…மத்திய அரசும் நீதி மன்றமும் அதை கண்காணிக்க வேண்டும். தென் மாநிலங்களில் பாஜக நோட்டா விற்கு கீழ் தான் வாக்கு பெறும். நாளை ராஜிவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் சார்பில் அமைதி பேரணி நடைபெறும் என்று கூறினார்.

The post தென் மாநிலங்களில் பாஜக நோட்டா விற்கு கீழ் தான் வாக்கு பெறும்: செல்வப்பெருந்தகை காட்டம்! appeared first on Dinakaran.

Tags : southern ,BJP ,Selvaperundhai Kattam ,Chennai ,Selvaperunthakai ,Tamil Nadu Congress Committee ,President ,Selvaperunthagai ,Uttar Pradesh ,Farrukhabad ,
× RELATED சைபர் குற்றங்கள்: தென்மண்டல ஐ.ஜி. பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை