×

தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து 18 பேர் உயிரிழப்பு: சத்தீஸ்கரில் சோகம்

சத்தீஸ்கர்: கவர்தா அருகே பிக்அப் வேன் கவிழ்ந்து 18 பேர் உயிரிழந்தனர். பைகா பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 25 பேர் கொண்ட குழு, பாரம்பரிய டெண்டு இலைகளை சேகரித்துவிட்டு பிக்கப் வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பஹ்பானி பகுதிக்கு அருகே 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி, 18 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சிலரது நிலைமை மோசமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ரக்கு வாகனம் அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்திருக்கலாம் என்றும் அனைவரும் கூயில் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

இந்த விபத்து குறித்து சத்தீஸ்கர் மாநில துணை முதல்வர் விஜய் சர்மா எக்ஸ் தளத்தில் கூறியதாவது; ​​”கவர்தாவில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பிக்-அப் வாகனம் கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. இதில் அன்புக்குரியவர்களை இழந்த அனைத்து குடும்பங்களுக்கும் எனது இரங்கல் தெரிவிக்கிறேன். இதில், காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய விரும்புகிறேன், மாநில அரசின் மேற்பார்வையில், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அனைத்து உதவிகளையும் வழங்குவதில் உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

The post தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து 18 பேர் உயிரிழப்பு: சத்தீஸ்கரில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,Kawardha ,Baiga ,Dinakaran ,
× RELATED சத்தீஸ்கரில் பிக்அப் வேன் கவிழ்ந்து 17 பேர் பலி