×

அகமதாபாத் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் கைது..!!

அகமதாபாத்: அகமதாபாத் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில், இலங்கையைச் சேர்ந்த 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) கைது செய்துள்ளது. குஜராத் ஏடிஎஸ், தீவிர விசாரணைக்காக சந்தேக நபர்களை யாருக்கும் தெரியாத ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சசேர்ந்த 4 தீவிரவாதிகளும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. அகமதாபாத் விமான நிலையத்திற்கு அவர்கள் ஏன் வந்தார்கள் என்பதற்கான துல்லியமான நோக்கம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. இதனால் அந்த விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தகுதிச் சுற்று மற்றும் எலிமினேட்டர் ஆட்டங்களுக்காக மூன்று ஐபிஎல் அணிகளும் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வருவதற்கு சிறிது நேரம் முன்னதாக இந்த கைது செய்யப்பட்டுள்ளது.

 

The post அகமதாபாத் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Ahmedabad Airport ,I. S. I. S. ,Ahmedabad ,S. I. S. ,Sardar Vallabhai Patel International Airport ,ISIS ,Sri Lanka ,Gujarat Extremist Prevention Unit ,ADS ,S. I. S. 4 ,
× RELATED அகமதாபாத் விமான நிலையத்தில்...