×

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அத்திப்பள்ளம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வேல்முருகன் என்பவர் சொந்தமாக அனுமதி வாங்கி பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.அந்த பட்டாசு ஆலையின் பின்புறம் பட்டாசு குடோன் இருந்துள்ளது.

இந்த குடோனை விரிவாக்கம் செய்யும் பணிக்காக வந்தவர்கள் இரும்பு சீட் போடுவதற்காக வெல்டு வைத்த போது அதிலிருந்து பரவிய தீ அந்த பட்டாசு குடோனில்பட்டு குடோனுக்கு உள்ளே இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதற தொடங்கியது. அப்போது கடையின் உரிமையாளர் வேல்முருகன் தம்பி கார்த்திக் மற்றும் தொழிலாளிகள் சிலர் உள்ளே இருந்தனர். மளமளவென பட்டாசுகள் வெடித்து சிதறியபோது சம்பவ இடத்திலேயே கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயமடைந்த மற்றொரு தொழிலாளி திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் தீயணைப்பு துறையினர் தீயை முழுமையாக அனைத்து யாரேனும் பட்டாசு குடோனில் உள்ளனரா என்பது குறித்து பார்த்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து விராலிமலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மேலும் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பட்டாசு ஆலை உரிய அனுமதி பெற்று நடத்தி வந்தது தெரியவந்தது. சிவகாசியிலிருந்து கொண்டுவரப்படும் பட்டாசுகள் தீபாவளி மற்றும் பண்டிகை காலங்களில் விற்பனை செய்வதற்காக நிரந்தர பட்டாசு கடை அமைக்கப்பட்டு வந்துள்ளது. விதிமுறைகளின் படி செயல்படுவதாக காவல்துறையினரும், அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kudon ,Viralimalai ,Pudukkottai ,Viralimalai, Pudukkottai district ,Pudukkottai district ,Atippallam ,Velmurugan ,
× RELATED பாதுகாப்புப் பணியில் இருந்தபோது பணம்...