×

22ல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.. தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!!

சென்னை: தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

நாளை 3 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு
தேனி, தென்காசி, விருதுநகரில் நாளை மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை 13 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
குமரி, நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் நாளை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே 22-ல் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
நாளை மறுநாள் தேனி, தென்காசி, நெல்லை, குமரியில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மே 23-ல் 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
குமரி, நெல்லை, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் மே 23-ம் தேதி கனமழை பெய்யக்கூடும். மே 24-ம் தேதி நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மே 25, 26 தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு
மே 25, 26 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மே 22-ல் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது
வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடகிழக்கு நோக்கி நகர்ந்து மே 24 காலை தாழ்வுமண்டலமாக வலுப்பெறும். மத்திய வங்கக்கடல் பகுதியில் மே 24-ம் தேதி காலை தாழ்வுமண்டலமாக வலுப்பெறும்.

தமிழ்நாட்டில் 23-ம் தேதி வரை கனமழை நீடிக்கும்
தமிழ்நாட்டில் 23-ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் 23ம் தேதிக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்
வங்கக்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் மே 23-ம் தேதிக்குள் கரை திரும்ப அறிவுறுத்தியுள்ளது.

The post 22ல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.. தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Weather Centre ,Chennai Meteorological Centre ,Neelgiri ,Kowai ,Tiruppur ,Theni ,Dindigul ,Pudukkottai ,Thanjai ,post ,
× RELATED வங்கக்கடலில் உருவாகிறது ‘ரீமால்’...