×

பெட்ரோல் பங்கிற்கு டீசல் பிடிக்க வந்த லாரியின் டீசல் டேங்க் வெடித்து தீ விபத்து!

தெலங்கானா: பெட்ரோல் பங்கிற்கு டீசல் பிடிக்க வந்த லாரியின் டீசல் டேங்க் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சாமர்த்தியமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்த பெட்ரோல் பங்க் ஊழியர். தெலங்கானா மாநிலம், புவனகிரியில் பெட்ரோல் பங்கில் நேற்று லாரியின் டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்தது. தெலங்கானா மாநிலம் புவனகிரி அருகே நயாரா பெட்ரோல் பங்கில் நேற்று ஒரு லாரி டீசல் நிரப்ப பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் டீசல் டேங்க் வெடித்து விபத்து ஏற்பட்டது. லாரி டேங்க் வெடித்து தீப்பிடித்ததும் அங்கிருந்தவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அலறியடித்து ஓடியுள்ளார். ஆனால், பெட்ரோல் பங்கின் ஊழியர்களில் ஒருவர் மட்டும் துணிவுடன் முன்வந்து ஓடிச்சென்று தீயணைப்பு கருவியை எடுத்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தார். இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

 

The post பெட்ரோல் பங்கிற்கு டீசல் பிடிக்க வந்த லாரியின் டீசல் டேங்க் வெடித்து தீ விபத்து! appeared first on Dinakaran.

Tags : Telangana ,Bhubanagiri, Telangana ,Dinakaran ,
× RELATED தெலுங்கானா மாநிலம் மேடக் நகரில் பாஜக பேரணியில் இருதரப்பு மோதல்