×

தொடர்மழை காரணமாக சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை விதிப்பு!

மதுரை: ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சுற்றுலா ஸ்தலங்களுக்கு செல்ல உள்ளூர் வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு 21ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில், ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கும், சதுரகிரி கோவிலில் பக்தர்கள் இரவில் தங்கவும் அனுமதி இல்லை. அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தாலோ மலையேறி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கியதால் தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சுற்றுலா ஸ்தலங்களுக்கு செல்ல உள்ளூர் வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு 21ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

The post தொடர்மழை காரணமாக சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை விதிப்பு! appeared first on Dinakaran.

Tags : Chaturagiri ,MADURAI ,CHADURAGIRI ,SRIVILLIPUTHUR ,West Continuity Mountain ,ContinueDevotees ,Dinakaran ,
× RELATED ஆடி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை...