×

தரைப்பாலத்தை கடக்க முயன்றவர் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு: மீட்கச் சென்றவர்களும் பள்ளத்தில் விழுந்ததால் பரபரப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே தரைப்பாலத்தை கடக்க முயன்றவர் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் அவரை மீட்க சென்றவர்களும் பள்ளத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கனமழையால் அனைத்துபதி என்ற பகுதியில் 2 குட்டைகள் முழுவதுமாக நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கோபிசெட்டிபாளையம் திருப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள தரைப்பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் அந்த வழியாக வாகனத்தில் சென்ற ஒருவர் தண்ணீரின் வேகத்தால் கீழே விழுந்தார்.

அப்போது அங்கிருந்த 3 பேர் அவரை மீட்க சென்ற போது தடுமாறி அவர்களும் பள்ளத்தில் விழுந்தனர். பின்னர் சுதாரித்து கொண்ட நால்வரும் வெள்ளத்திலிருந்து மீண்டு வந்தனர். வாகனமும் பத்திரமாக மீட்கப்பட்டது. மதுரையில் பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் பாய்ந்து ஆட்டோ ஒன்று விபத்துக்குள்ளானது. கோரிப்பாளையம் செல்லூர் சாலையில் பால வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஷேர் ஆட்டோ ஒன்று குளம் போல தேங்கியிருந்த 6 அடி பள்ளத்தில் தவறி விழுந்தது. ஆட்டோவிலிருந்த 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதே போல் ஆரப்பாளையத்தில் கார் ஒன்று தேங்கி நின்ற மழைநீரில் சாலை தெரியாமல் தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

தர்பபுரி மாவட்டம் அரூர் அருகே கலசப்பாடி தொகுதியில் ஆபத்தை உணராமல் மக்கள் காட்டாற்றை கடக்கிறார்கள். அரச நத்தம், ஆலமரத்து வலசு, தரிசுக்காடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு உரிய சாலை வசதி இல்லாததால் கயிறு கட்டியும் இரு சக்கர வாகனங்களிலும் காட்டாற்றை கடந்து செல்கின்றனர். ஸ்ரீ வில்லிபுத்தூரில் அற்று பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேற்கு தொடர்ச்சிமலை வனப்பகுதிகளில் அத்திக்கோவில் ஆற்று பகுதி, சதுரகிரி, சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதிகள் உள்ளன.

கனமழை காரணமாக ஆற்று பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழையால் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தேசிய நெடுஞ்சாலையில் 4மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அங்கு சாலை விரிவாக்க பணி நடைபெற்று வரும் நிலையில் முறையாக மாற்று பாதை அமைக்கப்படவில்லை. எனவே காவல்துறையினர் அனைத்து வாகனங்களையும் செமடைபட்டி சாலைவழியாக திருப்பி விட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதே போல் மழைநீர் வெளியேற முடியாததால் அங்கிருந்த பெட்ரோல் நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது.

The post தரைப்பாலத்தை கடக்க முயன்றவர் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு: மீட்கச் சென்றவர்களும் பள்ளத்தில் விழுந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Gunnatur district ,Dartupati ,Cubicettipalayam ,Dinakaran ,
× RELATED பல்லடம் அருகே கடன் தொல்லையால்...