×

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை கழிவை அகற்ற நவீன வாகனம்

 

கோவை, மே 20: கோவை மாநகராட்சியில் ஒருங்கிணைக்கப்பட்ட 60 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்படும்போது தொழிலாளர்கள் உள்ளே இறங்கி கழிவுகளை சுத்தம் செய்யும் நிலை இருந்து வருகிறது. சாக்கடை கால்வாயில் ஆட்களை இறக்கி சுத்தம் செய்வதை தடுக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தற்போது பாதாள சாக்கடையில் உள்ள கழிவுகளை அகற்ற அதிநவீன வாகனம் புதிதாக வாங்கப்பட்டுள்ளது.  இதனை பயன்படுத்தி சாக்கடை கால்வாயில் உள்ள மண், அடைப்புகளை எளிதாக சரிசெய்ய முடியும். தவிர, ‘மேன்ஹால்’-ல் ஆட்கள் இறங்கி சுத்தம் செய்து வரும் நிலையில்,

இந்த வாகனத்தில் உள்ள நவீன கருவியை பயன்படுத்தி கழிவுகளை சுத்தம் செய்ய முடியும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.  தவிர, கழிவுநீரை விரைந்து அகற்றும் வகையிலான நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனம் ஒன்றும் வாங்கப்பட்டுள்ளது. இந்த நவீன வாகனங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தெரிகிறது.

The post கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை கழிவை அகற்ற நவீன வாகனம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore Corporation ,Coimbatore ,Dinakaran ,
× RELATED கோவை மாநகராட்சி எல்லையை விரிவுப்படுத்த ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கோரிக்கை..!!