×

வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை செரியலூர் கரம்பக்காடு முத்துமாரியம்மன்கோயில் பொங்கல் திருவிழா

புதுக்கோட்டை, மே 20: கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கரம்பக்காடு முத்துமாரியம்மன்கோயில் திருவிழாவில் நேற்று பொங்கல் திருவிழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடி ஏற்றம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழா தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர்கள் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கரைகாரர்கள் சார்பில் பகலில் பால்குடம் எடுத்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து அன்னதானம் வழங்குதல், இரவில் மேளதாளங்கள், வாண வேடிக்கைகளுடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பட்டு டுத்தி அம்மன் வீதிஉலாவும் நடந்தது. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று பொங்கல் விழா நடந்தது. மேலும் பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். இன்று மாலை வைரத் தேரோட்டமும், நாளை (செவ்வாய்கிழமை) தீர்த்தத் திருவிழாவும், வருகிற புதன்கிழமை தெப்பத் திருவிழாவும் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை விழாக்குழுவினரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரமங்கலம் போலீசாரும் செய்து வருகின்றனர்.

The post வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை செரியலூர் கரம்பக்காடு முத்துமாரியம்மன்கோயில் பொங்கல் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Agriculture Seriyalur Karambakkadu Muthumariammankoil Pongal Festival ,Pudukottai ,Pongal ,Muthumariyammankoil ,Seriyalur Karambakkadu ,Keeramangalam ,Pudukottai District ,Seriyalur Karambakkadu Muthumariamman temple festival ,Seriyalur Karambakkadu Muthumariamman Temple Pongal Festival ,
× RELATED நகராட்சிகள், பேரூராட்சிகள், உள்ளாட்சி...