×

வீட்டின்முன் மறைத்து வைத்திருந்த 1,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

புதுக்கோட்டை, மே 20: புதுக்கோட்டை சிப்காட் பகுதியில் வீட்டின் முன் 20 சாக்குமூட்டைகளில் மறைத்து வைத்திருந்த 1,000 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு காவல்துறை தலைவர் ஜோசி நிர்மல் குமார் உத்தரவின்படி, திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மேற்பார்வையில், தஞ்சாவூர் சரக காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் அறிவுரைப்படி, புதுக்கோட்டை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசாருக்கு குடிமைப்பொருட்கள் கடத்தலை தடுக்க கண்காண்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு, கிடைத்த ரகசிய தகவலின் பேரில், புதுக்கோட்டை, சிப்காட், மருதுபாண்டி நகரில் உள்ள ஒரு வீட்டின் முன்பு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகளை சோதனை செய்தனர். அதில் 20 வெள்ளை நிற சாக்கு மூட்டைகளில் சுமார் 1000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இதனையடுத்து அரிசியை பறிமுதல் செய்த போலீசார் சிப்காட் முருகதாஸ் (52 )என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

The post வீட்டின்முன் மறைத்து வைத்திருந்த 1,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Chipkot ,Chief of Police ,Chief of Civil ,Supplies Crime Investigation ,Josie Nirmal Kumar ,Dinakaran ,
× RELATED நகராட்சிகள், பேரூராட்சிகள், உள்ளாட்சி...