×

மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வசதி

நாமக்கல், மே 20: தமிழக அரசால் வீடு ஒதுக்கீடு பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிகளில் வட்டியில்லா கடன் பெற ஏற்பாடு செய்யப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காக வட்டியில்லா கடன் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு தலைமை வகித்து கலெக்டர் உமா பேசியதாவது: தமிழ்நாடு அரசு, மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளியின் பங்கு தொகையினை செலுத்துவதற்கு, வட்டியில்லா வங்கிக்கடனுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வீட்டு வசதி வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகள் மூலம் வீடு ஒதுக்கீட்டு உத்தரவு பெற்ற, மாற்றுத்திறனாளிகளுக்கு தனிநபர் ஜாமீனில் இருந்து விலக்கு பெற்றிடும் வகையில், அரசால் வீடு ஒதுக்கீடு உத்தரவு பெற்ற மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர ஓய்வூதிய உத்தரவை, மாற்றுத்திறனாளிகளின் ஜாமீனாக வங்கிகளில் சமர்ப்பித்து, வட்டியில்லா வங்கி கடனுதவி பெறலாம்.இந்த கடன் உதவியின் மூலம், மாற்றுத்திறனாளிகள் அதிகபட்சம் ₹1.50 லட்சம் கடன் பெற்று, 5 ஆண்டுக்கு வட்டியில்லாமல் திருப்பி செலுத்தலாம். மேலும், இத்திட்டம் குறித்த தகவல்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொலைபேசி எண்: 04286-280019 மூலம் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வசதி appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...