×

ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

திருமலை: ஆந்திராவில் தேர்தலின்போது நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக போலீசாரின் செயல்பாடுகளை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. ஆந்திராவில் வாக்குப்பதிவு நாளன்றும் அதன் பிறகும் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஐ.ஜி. வினீத் பிரிஜ்லால் தலைமையில் 13 பேர் கொண்ட சிறப்புக் குழுவை டிஜிபி ஹரிஷ் குமார் குப்தா நியமித்தார்.

மேலும், பல்நாடு, அனந்தபூர், திருப்பதி மாவட்டங்களில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபி உத்தரவிட்டார். இந்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழு விரைந்து விசாரணை நடத்தி வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கலவரம் தொடர்பான எஸ்ஐடி விசாரணையை தொடங்கியது. தொடர்ந்து, தாடிபத்ரி, நரசராவ் பேட்டை மற்றும் திருப்பதியில் நேரடியாக கள ஆய்வு நடத்தி வருகிறது. கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை எஸ்ஐடி குழு ஆய்வு செய்து வழக்குகள் பதிவாகியும் கைது செய்யப்படாத தலைவர்கள் எங்கே என விசாரித்து வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகள், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மூலம் மேலும் சில புதிய வழக்குகள் பதிவு செய்ய உள்ளனர். இரண்டு விசாரணை அறிக்கையை மாநில டிஜிபிக்கு சிறப்பு புலனாய்வு குழு வழங்க உள்ளனர். திருப்பதியில் தேர்தலுக்கு பிந்தைய மோதல் குறித்து சிறப்பு புலனாய்வு குழுவை சேர்ந்த டிஎஸ்பி ரவிமனோகராச்சாரி தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, வெங்கடேஸ்வரா பல்கலைகழக வளாக காவல் நிலையத்தில் உள்ள வழக்குகளுடன் கலவரம் தொடர்பான எப்ஐஆர் விவரங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து கேட்டறிந்தனர்.

The post ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை appeared first on Dinakaran.

Tags : Andhra ,Special Investigation Team ,Tirumala ,Andhra Pradesh ,IG ,Vineet Brijlal ,
× RELATED பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்டு...