×

மேற்கு வங்கத்தில் முதலீடு செய்ய தொழிலதிபர்கள் அச்சம்: மம்தா மீது ஒன்றிய அமைச்சர் குற்றச்சாட்டு

பங்குரா: மேற்கு வங்கத்தில் ஊழல் மற்றும் வன்முறை அதிகரித்துள்ளதால் முதலீடு செய்வதற்கு தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என ஒன்றிய அமைச்சர் குற்றம் சாட்டினார். மேற்கு வங்கம்,பங்குரா தொகுதியில் பாஜ சார்பில், சுபாஷ் சர்க்கார் மீண்டும் போட்டியிடுகிறார். ஒன்றிய கல்வி துறை இணை அமைச்சர் சர்க்கார் நேற்று கூறுகையில்,‘‘ மேற்கு வங்கத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்புக்கு திரிணாமுல் கட்சியின் நிலம் கையகப்படுத்துதல் கொள்கை மற்றும் ஊழல் தான் காரணம்.இதனால் மாநிலத்தில் முதலீடு செய்வதற்கு தொழிலதிபர்கள் பயப்படுகின்றனர். மாநிலத்தில் தொழில் முதலீட்டை அதிகரிக்க, திரிணாமுல் காங்கிரஸ் அரசை அகற்ற வேண்டும்.

மேற்கு வங்கத்தில் ஆளும் அரசிற்கு தொடர்புடைய திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஊழல் மற்றும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேஷ்காளியில் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் நில அபகரிப்பு போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான திரிணாமுல் கட்சி பிரமுகர் ஷாஜகான் ஷேக்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது என்றார்.

The post மேற்கு வங்கத்தில் முதலீடு செய்ய தொழிலதிபர்கள் அச்சம்: மம்தா மீது ஒன்றிய அமைச்சர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Bengal ,Union ,Bankura ,West Bengal ,minister ,Subhash Sarkar ,BJP ,Union Minister of State ,Education ,Union Minister ,Mamata ,
× RELATED வங்க கடலில் உருவான ரெமல் புயலால் மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்