×

வெறுப்பை பரப்பும் வகையில் தொடர்ந்து பேசி வரும் பிரதமர் மோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் ஆணையருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் கடிதம்

டெல்லி: வெறுப்பை பரப்பும் வகையில் தொடர்ந்து பேசி வரும் பிரதமர் மோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார். பாஜக தலைவர்கள் தேர்தல் நடத்தை விதிகளை தொடர்ந்து மீறி வருவதை தேர்தல் ஆணையத்திடம் புகாராக அளித்ததாக சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர்கள் மீதான தீவிர புகார்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காத துரதிருஷ்டவசமானது. பாஜக தலைவர்கள் அப்பட்டமாக பொய் பேசுவதாகவும் இட்டிக்கட்டி பேசி அச்சத்தை பரப்புவதாகவும் மார்க்சிஸ்ட் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். மத ரீதியில் பாஜக தலைவர்கள் மக்களிடம் வாக்கு கோருவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பலமுறை புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேர்தலில் வெறுப்புப் பிரச்சாரம் மேற்கொள்வதை முளையிலேயே கிள்ளி எறிய வலியுறுத்தபோதிலும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. பிரதமர் மோடி மீது கொடுத்த புகாருக்கு அவரிடம் விளக்கம் கேட்காமல் பாஜக தலைவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய பிறகும் பிரதமர் மோடியும், அக்கட்சியின் தலைவர்களுக்கு தொடர்ந்து வெறுப்பு பேச்சை பேசிவருகின்றனர்.

The post வெறுப்பை பரப்பும் வகையில் தொடர்ந்து பேசி வரும் பிரதமர் மோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் ஆணையருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Marxist ,Communist ,Secretary General ,Chief Election Commissioner ,Delhi ,General Secretary ,Sitaram Yechuri ,BJP ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்